சசிகுமார், நந்திதா நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அசுரவதம்'. 'கொடிவீரன்' படத்துக்குப் பின் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அசுரவதம்'. சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. டீசரை இயக்குநர் கௌதம் மேனன் ட்விட்டரில் வெளியிட உள்ளார். இந்நிலையில், 'அசுரவதம்' படத்தின் டீசரை இன்று மாலை 7 மணிக்கு கௌதம் மேனன் ட்விட்டரில் வெளியிட இருக்கிறார். இந்தத் தகவலை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த நிறுவனம் அல்லாத வேறொரு பேனரில் சசிகுமார் நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13ல் இப்படம் ரிலீஸாக உள்ளது. <br /> <br /> <br />Sasikumar's 'Asuravadham' teaser will be released by Gautham vasudev menon today evening. <br />