தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கியிருக்கும் 'வடசென்னை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மூன்று பாகங்களாக தயாராகும் 'வடசென்னை' படத்தின் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. அதில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'வடசென்னை'. 'வடசென்னை' படம் 3 பாகமாக எடுக்கப்பட இருக்கிறது முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
'வடசென்னை' படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை எனக் கூறப்படுகிறது.

Dhanush released 'Vadachennai' first look posters on twitter.