மேலூர் அருகே ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் மாணவரின் விரல்கள் துண்டானது. அண்மைக் காலமாக கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் வெறித்தனமான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். <br /> <br />பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் கத்தி கலாச்சாரம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மேலூர் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் மாயக்காளை- தீபா தம்பதி. இவர்களின் மகன் அர்ஜுன்.