Surprise Me!

சூர்யாவுடன் இணைகிறார் பா. ரஞ்சித்- வீடியோ

2018-03-10 2,696 Dailymotion

கபாலிக்கு முன்பே சூர்யாவுடன் இணைய வேண்டிய ரஞ்சித் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இணையலாம் என்கிறார்கள். அட்டகத்தி படத்தை வெளியிட்ட ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திலேயே ரஞ்சித்துக்கு கார்த்தியை இயக்கும் வாய்ப்பு தரப்பட்டது. கார்த்திக்கு சில கால இடைவெளிக்கு பிறகு பெரிய ஹிட்டாக அமைந்தது அந்த படம். அதன் பிறகு சூர்யாவை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியிடமிருந்து அழைப்பு வரவே கபாலியில் பிசியானார் ரஞ்சித். கபாலிக்கு பிறகும் சூர்யா ரஞ்சித் கூட்டணி இணையவிருந்தது. ஆனால் மீண்டும் ரஜினியே அழைத்து அடுத்த படத்தையும் இயக்க வாய்ப்பு தந்ததும் காலாவுக்கு வந்தார் ரஞ்சித். இந்த முறை ரஞ்சித்தை மிஸ் பண்ணிடவே கூடாது என்று உறுதியாக இருக்கிறாராம் சூர்யா. நேற்று முன் தினம் நடந்த ஞானவேல்ராஜாவின் நோட்டா பிரஸ்மீட்டில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். சூர்யா - ரஞ்சித் - ஞானவேல்ராஜா கூட்டணி உறுதியாகி விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. <br /> <br />Sources say Kabaali and Kaala fame Director P Ranjith is going to director Surya's next under Gnanavelraja banner. <br />

Buy Now on CodeCanyon