கண் சிமிட்டலின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரியா வாரியர் வெகு விரைவில் செம பிரபலமாகிவிட்டார்.
'ஒரு அடார் லவ்' படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் கமிட் ஆனார் பிரியா வாரியர்.

தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடிக்கவுள்ளார் பிரியா.
மலையாள பெண்கள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகி வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்களால் அதிகம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். அவருடைய புகைப்படம் இடம்பெறும் மீம்ஸ் தற்போது அதிகம் வருகின்றன.

இந்திய அளவில் பிரபலமாகியுள்ள பிரியா வாரியருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் 'சிம்பா' படத்தில் நடிக்க இருக்கிறார் பிரியா வாரியர்.
ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் தெலுங்கில் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'டெம்பர்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பாலிவுட் படத்தில் நடிப்பதன் மூலம் பிரியா வாரியர் இந்திய ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலர், பிரியா வாரியருக்கு கிடைக்கும் அமோக வரவேற்பு ஓவர் ரேட்டட் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

Priya Varrier, who has attracted fans through eye winks, became famous. Priya varrier to act with Ranveer Singh in a Bollywood film.