துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் சென்ற ஸ்ரீதேவி அங்கு இறந்துவிட்டார். சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு 16-ம் நாள் சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் கடந்தாண்டு வைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உருவம் கொண்ட பொம்மையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. <br /> <br />துபாயில் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் சென்றார் ஸ்ரீதேவி. அங்குள்ள ஹோட்டல் அறையில் உள்ள குளியலறை பாத்டப்பில் மூழ்கி இறந்துவிட்டார்.