ஆறுமுகசாமி கமிஷனில் 2-ஆவது முறையாக ஆஜரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதா வீட்டில் மயங்கினார் என்று வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே ஆண்டில் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தமிழக அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருக்கமானவர்கள் என 20-க்கும் மேற்பட்டோரை அழைத்து விசாரணை நடத்தப்படுகிறது. <br /> <br /> <br />Dr Sivakumar appears before Arumugasamy Commission and says that Jayalalitha faints in Poes Garden House after we give first aid and then she was taken to Apollo Hospital. <br />