உடுமலை சங்கர் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி, கவுசல்யா தந்தை உள்பட 8 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. <br /> <br />Kausalya's father, along with eight others, has filed a case in the Madras High Court seeking to cancel their sentence in Udumalai Shankar murder case.