ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். <br /> <br />தமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சூழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது. <br /> <br />TN deputy CM O. Paneerselvam announced in budget state is benefited because of GST implementation and state received Rs.632 crores from centre as compensation of new tax system introduced