கணவன் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தருமபுரி அருகே நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br /> தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் மாதேசன். இவர் தேன்கனிக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 27ம் தேதி மாதேசன் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் இறந்து கிடந்தார்.