Surprise Me!

காரை பரிசளித்த சூர்யா! ஏன்? எதற்கு?- வீடியோ

2018-03-16 4,796 Dailymotion

தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற்றதையடுத்து சூர்யா அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா காரை பரிசளித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த தானா சேர்ந்த கூட்டத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் ஹிட்டானதால் சூர்யா மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். தானா சேர்ந்த கூட்டம் எனும் வெற்றிப் படத்தை கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு பரிசு கொடுக்க விரும்பினார் சூர்யா. இதையடுத்து சிவப்பு நிற டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை பரிசளித்துள்ளார். சூர்யா தனக்கு கார் பரிசளித்தபோது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம். இந்த அன்பான பரிசுக்கு நன்றி சூர்யா சார். வளர்ந்து வரும் என்னை ஊக்குவிக்க பெரிய மனது வேண்டும். இவ்வளவு அன்புக்கு தகுதியானவனா என்று தெரியவில்லை என்று ட்வீட்டியுள்ளார் விக்கி. சூர்யாவிடம் இருந்து விக்கி கார் சாவியை பரிசாக பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர். ஹரிக்கு ஒரு கார், விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா, செல்வராகவனுக்கு என்னவோ என்று ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார். <br /> <br /> <br />

Buy Now on CodeCanyon