Surprise Me!

சிவ கார்திகேயனோட அடுத்த படம் யாரோட தெரியுமா?-வீடியோ

2018-03-17 3,739 Dailymotion

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் படத்திற்குப் படம் மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்கிறார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்திருக்கிறார் சிவா.
இப்படத்திற்குப் பிறகு 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது.

ரவிகுமார் இயக்கும் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், 'சிவா மனசுல சக்தி' 'OK OK' படங்களின் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் சந்தானம் நாயகனாக நடிக்கும் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வசனங்களை எழுதியவர் எம்.ராஜேஷ் என்பதும், எம்.ராஜேஷின் உதவியாளர் தான் இயக்குனர் பொன்ராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போதைக்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

Sivakarthikeyan is currently acting in the film 'Seemaraja' directed by Ponram. Ravikumar Rajendran is to direct the next film of Sivakarthikeyan. After that Sivakarthikeyan joins with director Rajesh.

Buy Now on CodeCanyon