நடிகை ஏமி ஜாக்சன் போட்டுள்ள ஒரு ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர்.
தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்த வசதியாக சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் வீடு வாங்கினார் ஏமி ஜாக்சன். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வராத நிலையில் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
2018ம் ஆண்டு முழுவதும் ஹாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தார். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் செட்டிலாகப் போவதாகக் கூறி ட்வீட் போட்டுள்ளார். அவர் தற்போது மொராக்கோவில் தான் உள்ளார்.
மொராக்கோவில் இருந்து திரும்பி வர மாட்டேன் என்று ஏமி ட்வீட்டியதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏன், ஏமி இந்த முடிவு? அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று ரசிகர்கள் பதறியுள்ளனர்.
மொராக்கோ வேண்டாம் திரும்பி வந்துவிடுங்கள் என்று ரசிகர்கள் அவரிடம் கெஞ்சியுள்ளனர்.

Actress Amy Jackson tweeted that, 'I mean - I’m moving to Morocco and never coming back. Bye.' Fans are begging her to come back.