ஐஸ்வர்யா தனுஷ் பேய் படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
3 படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படத்தில் தனது கணவர் தனுஷையே ஹீரோவாக நடிக்க வைத்தார். தனுஷ் நடித்ததுடன் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார்.

3 படம் மூலம் கோலிவுட்டுக்கு புது இயக்குனர் மட்டும் அல்ல புது இசையமைப்பாளரும் கிடைத்தார். அந்த இசையமைப்பாளர் வேறு யாரும் அல்ல சிவகார்த்திகேயனின் செல்லம் அனிருத் தான்.

3 படத்தை அடுத்து கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐய்வர்யா. அந்த படம் சுமாராக ஓடியது. இந்நிலையில் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்தார்.

நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்காரர்கள் படமாக எடுத்து அவரை பெருமைப்படுத்தினார்கள். நல்ல வேளை அவர்கள் மாரியப்பன் படத்தை எடுக்கும் முன்பு ஐஸ்வர்யா அறிவித்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஐஸ்வர்யா தனுஷ் தனது 3வது படத்தை இயக்க தயாராகிவிட்டாராம். ஆனால் அது மாரியப்பன் தங்கவேலு படம் கிடையாதாம். மாறாக பேய் படத்தை இயக்குகிறாராம்.
மனைவி இயக்கும் பேய் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறாராம். படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்ற விபரம் விரைவில் வெளியாகுமாம்.

Buzz is that Aishwarya Dhanush is set to direct her third movie which is not Mariappan Thangavelu's biopic. She is planning to direct a horror movie.