அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடைசியாக டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் ஜெய் வீர ஹனுமான் சீரியல் பார்த்தார் அப்போது திடீரென அவர் படுக்கையில் சாய்ந்தார் என சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆறுமுகமசாமி ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளார் சசிகலா. அதில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதிவரை நடந்த சம்பவங்களை 55 பக்கங்களில் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். அதில் செப்டம்பர் 21ஆம் தேதி முதலே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்துள்ளது. மெட்ரோ ரயில் விழாவில் மெதுவாக நடந்து வந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்த அவர், 22ஆம் தேதியன்று சோர்வாக காணப்பட்டார் அவர் தலைமை செயலகம் செல்லவில்லை என்று கூறியுள்ளார் சசிகலா. <br /> <br />The last serial that Jayalalithaa watched before she passed away was Jai Veera Hanuman. On the evening of December 4 2016 before the former Tamil Nadu chief minister suffered a massive cardiac arrest, she had watched a serial and even asked for coffee, her close aide Sasikala Natarajan said. <br />
