Surprise Me!

கற்ற தொழிலை கைவிட்ட சாய் பல்லவி- வீடியோ

2018-03-26 2,289 Dailymotion

சினிமாவுக்காக தான் கற்றுக் கொண்ட தொழிலை கைவிட்டுள்ளார் சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான சாய் பல்லவி. மலையாளத்தை அடுத்து தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சாய் பல்லவி தமிழ் படங்களில் தற்போது பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி கூறியிருப்பதாவது, தாம்தூம் படத்தில் கங்கனா ரனாவத் தோழியாகவும், கஸ்தூரிமான் படத்தில் மீரா ஜாஸ்மின் தோழியாகவும் நடித்துள்ளேன். சினிமா நிரந்தர தொழில் இல்லை. அதிலும் ஹீரோயின்களின் காலம் 6 ஆண்டுகள் தான் என்றார் என் அப்பா. சினிமா தொழில் நிரந்தரம் இல்லை என்பதால் படிப்பு தான் கை கொடுக்கும் என்று அப்பா நம்பினார். இதையடுத்து மருத்துவம் படிக்க என்னை ஜார்ஜியா அனுப்பி வைத்தார். பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது. சினிமாவில் முழு கவனம் செலுத்துவதால் டாக்டர் வேலையை செய்வது இல்லை. மருத்துவம் உயிர் சம்பந்தப்பட்டது. அதனால் சினிமாவில் நடித்துக் கொண்டே மருத்துவம் பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை. முழுநேர நடிகையாகிவிட்டதால் என் பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டத்தை கூட நான் பயன்படுத்தவில்லை. கடவுள் அருளால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். <br /> <br />Sai Pallavi said that since she has become a full time actress she is not practising medicine. She studied medicine as her father believes that cinema doesn't give permanent income. <br />

Buy Now on CodeCanyon