Surprise Me!

கள்ளகாதலில் சிக்கிய போலீஸ்- வீடியோ

2018-03-26 82 Dailymotion

கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருக்க இடையுறாக இருந்த கணவனை கொள்ள முயற்ச்சித்த போலீஸ்காரர் கைது செய்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது <br /> <br /> <br />தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி.யை சேர்ந்தவர் சாமி இவர் கம்பத்தில் விளையாட்டு ஆடை தயாரித்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.இவருக்கு அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த சுகந்திக்கும் திருமணமாகி இவர்களுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் என்ற போலீஸ்காரருக்கும் சுமதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலுக்கு இடையுறாக இருக்கும் கணவனை கொலை செய்ய சுகந்தி திட்டமிட்டுள்ளார் . எதற்சையாக சுகந்தியின் செல்போனை எடுத்த சாமி அதில் தன்னை கொலை செய்ய தனது மனைவியும், போலீஸ்காரர் சுதாகரும் திட்டமிட்டுள்ள ஆடியோ பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் பின்னர் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். கூடலூர் ஆய்வாளர் ஷாஜகான் தலைமையில் நடத்திய விசாரணையில் சுகந்தி, போலீஸ்காரர் சுதாகர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கூடலூர் எல்லைத்தெருவைச் சேர்ந்த பாண்டிய ராஜன் ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கள்ளக்காதலால் போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon