பிந்து மாதவி செய்த செயலை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா அளவுக்கு இல்லை என்றாலும் பிந்து மாதவிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவர் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் குணம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

பிந்து மாதவி தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அம்மாவிடம் முருங்கைக்காய் சாம்பார் கேட்டதற்கு அவர் மரத்தில் ஏறி காயை பறித்து வருமாறு கூறினாராம். இதையடுத்து பிந்து மரத்தில் ஏறி காய் பறித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிந்து மாதவி மரத்தில் ஏறி நின்ற புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டுள்ளனர். சிலரோ க்யூட் என்று தெரிவித்துள்ளனர்.

பிந்து மாதவியும் இளம் நடிகர் ஒருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. 31 வயதாகும் பிந்து மாதவிக்கு எப்பொழுது திருமணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிந்து மாதவி நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் அவர் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். அவருக்கு பெரிய பிரேக் இன்னும் கிடைக்கவில்லை.
சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பிந்து மாதவிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கை கொடுத்துள்ளது. பிந்து மட்டும் அல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது படங்களில் பிசியாகிவிட்டனர்.

Actress Bindhu Madhavi climbed a tree to pluck drumsticks after she asked her mom to prepare drumstick sambar.