சசிகலா புஷ்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ராமசாமி தன் கணவர் என்றும் தன்னிடம் இருந்து முறையாக விவகாரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியபிரியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். <br /> <br />மதுரை கீரைத்துறை காளிப்பட்டியை சேர்ந்தவர் சத்தியபிரியா. இவருக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று குந்தையும் உள்ளது. ராமசாமி ஆடிட்டராக உள்ளார். டெல்லியில் பணியாற்றி வரும் ராமசாமிக்கும் எம் பி சசிகலாபுஷ்பாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நேற்று திருமணமும் செய்து கொண்டனர். சசிகலாபுஷ்பா திருமணம் செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும் நேற்று தடையை மீறி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராமசாமியின் முதல் மனைவி சத்திய பிரியா மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் தன்னிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறவில்லை என்றும் சசிகலாபுஷ்பாவை திருமணம் செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுவதுடன் சசிகலாபுஷ்பாவின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார், இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியுள்ளதாக சத்தியபிரியா தெரிவித்தார். <br /> <br />Des : Ramasamy, who is second marriage to Sasikala Pushpa, is married to her husband and is not getting proper affair from him. She has filed a complaint at the Sathyapriya police station to take action against Ramasamy.