<br />உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் ஒப்படைத்து விட்டு காவல் நிலையத்திற்கு திரும்பி தலைமை காவலர் கார் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />வேலூர் மாவட்டம் வாணிச்சத்திரம் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவேரிபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திடும்படி தலைமை காவலர் செல்வத்திடம் ஆய்வாளர் உத்தரவிட்டதையடுத்து செல்வமும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் இறந்த பெண்ணின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்று ஒப்படைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட செல்வம் காவல் நிலையத்திற்கு வரும் போது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அதிவேகத்தில் வந்த கார் செல்வம் மீது மோதியுள்ளது. இதில் தலைமை காவலர் செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். <br />