Surprise Me!

சுசி லீக்ஸ் ரொம்ப பழசு, ஸ்ரீ லீக்ஸ் தான் புதுசு!- வீடியோ

2018-03-30 441 Dailymotion

சுசி லீக்ஸை போன்று தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ லீக்ஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு பட நடிகை ஸ்ரீ ரெட்டியால் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ ரெட்டிக்கும் திரையுலக பிரபலங்கள் சிலருக்கும் வேறு மாதிரியான தொடர்பு உள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது. ஸ்ரீ ரெட்டியுடன் தொடர்பில் இருப்பவர்களில் சில பிரபல நடிகர்களும் அடக்கமாம். பட ஆசை காட்டி தன்னை மோசம் செய்த திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டப் போவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் முன்பை விட தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களை எக்ஸ்போஸ் செய்யாமல் விட மாட்டேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. பட ஆசை காட்டி பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுபவர்களின் பெயர்களை தெலுங்கு சேனலுக்கு அளிக்கும் பேட்டியில் தெரிவிக்கப் போவதாக ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். <br /> <br />After Suchi Leaks stormed Kollywood, Sri leaks is doing rounds in telugu film industry. An actress named Sri Reddy announced that she will expose those involved in casting couch. <br />

Buy Now on CodeCanyon