கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையொட்டி கூடுதலாக ஒரு மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோடை ரயில் சேவை, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. <br /> <br />மூன்று பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பில் 32 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 100 இருக்கைகளும் உள்ளன. ஒரே நேரத்தில் 132 பேர் இந்த ரயிலில் பயணிக்கலாம் <br /> <br />Special high mountain rail service has been started after 6 years between Mettupalayam-Coonoor in Coimbatore district. Tourists are delighted by the addition of a hill ride in addition to the summer vacation.