மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்கச் சிவந்த வானம்' மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக பட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சிம்பு இன்ஜினியராகவும் நடிக்கிறார்களாம். 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் முகம் காட்டிய அருண் விஜய் இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா, ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணாக நடிக்கிறாராம். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுத்த '36 வயதினிலே' படம் குடும்பத்தலைவி ஒருவர் தனக்குத் தடையாக இருக்கும் எண்ணங்களையெல்லாம் உடைத்து சமூகத்தில் முன்னேறும் கதையில் எடுக்கப்பட்டது.
பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக வந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து 'மகளிர்' மட்டும் படத்திலும் பெண் சுதந்திரம் தொடர்பான கேரக்டர் தான். அடுத்து பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தில் போலீஸாக நடித்தார் ஜோதிகா.
'செக்கச் சிவந்த வானம்' படத்திலும் ஆணாதிக்கத்திற்கு எதிராகச் செயல்படும் பெண் கேரக்டர். ஜோதிகாவுக்கு வரிசையாக இதேபோன்ற கேரக்டர்கள் தான் அமைந்துகொண்டிருக்கின்றன. பெண்ணீயப் போராளி கேரக்டர் என்றாலே ஜோதிகா நினைவு வரும் அளவுக்கு உருவாக்கி விடுவார்களோ?

Actress Jyothika is acting as a woman against the patriarch in Maniratnam's 'Chekka Sivantha vaanam'.