போலீஸ் எட்டி உதைத்ததில் பைக்கில் இருந்து விழுந்து உயிரிழந்த திருச்சி உஷாவின் குடும்பத்தினரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடும் அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.

திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே ஹெல்மட் அணியாமல் சென்ற தம்பதியின் இருசக்கர வாகனத்தை கடந்த மார்ச் 7-ஆம் தேதி இரவு காவல் ஆய்வாளர் காமராஜ் நிறுத்தினார். ஆனால் ராஜா வண்டியை நிறுத்தாததால் மற்றொரு வண்டியில் சென்று ராஜாவின் வாகனத்தை எட்டி உதைத்தார்.

இதில்ராஜா - உஷா தம்பதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் உஷா உயிரிழந்தார். அவர் 3 மாத கர்ப்பிணி என்று கூறப்பட்டதால் இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan met the family members of late Mrs. Usha, offered his condolences for their loss and gave 5 lakhs to her mother S.Lourdhu Mary and brother Robert and 5 lakhs to her husband Raja as promised in Trichy today.