இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா ஆகியோர் நடிக்க 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'சாமி'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது.
விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு கேரக்டர் மொக்கையாக இருப்பதாகச் சொல்லி விலகிய த்ரிஷா, தயாரிப்பாளர் சங்கத்தில் விளக்கம் கேட்கப்பட்டு, தற்போது பிரச்னை தீர்ந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தில் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் விக்ரம். அப்பா, மகன் என இரண்டு ரோலில் நடிப்பதாகத் தெரிகிறது. அப்பா ஆறுச்சாமி முதல் பாகத்தின் போலீஸ். இரண்டாம் பாகத்தில் மகன் ராமசாமியாக களம் இறங்குகிறார் விக்ரம்.
'ஆறுச்சாமி'க்கு அசத்தல் டயலாக் வைத்த ஹரி ராமசாமிக்கும் ரசிகர்களைக் கவரும் விதமாக டயலாக் வைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம். 'சாமி ஸ்கொயர்' படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
தற்போது 'சாமி 2' படத்தின் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. இதில் விக்ரம் போலீஸ் ரோலில் மிகவும் ஸ்டைலாக கம்பீரமாகக் காணப்படுகிறார். சமூக வலைதளங்களில் வைராகிவரும் சாமி 2 ஸ்டில்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Vikram plays a cop role in 'Saamy square' movie. His character name is A.Ramasamy.