ஐ.பி.எல் கிரிக்கெட் சீஸன் தொடங்கவிருக்கும் நிலையில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிரிக்கெட் ஆடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் டி.வி-யில் தற்போது ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி 'சூப்பர் சிங்கர் சீஸன் 6'. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் சிம்பு, ராதா, விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விஜய் டி.வி-யின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன், சூப்பர் சிங்கர் செட்டிலேயே கிரிக்கெட் ஆடி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் அவரது நண்பரும் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரஙக்ள் கொண்ட அருண்ராஜா காமராஜ், காமெடியன் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி செம கலகலப்பாக இருக்கப்போகிறது.
படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு கைகொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் சிவகார்த்திகேயன், இப்படி ஜாலியாக கிரிக்கெட் விளையாடலாமா என சில ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Sivakarthikeyan plays cricket with actor Arunraja kamaraj and sathish in Super singer 6 show will be telecasted on Vijay TV.