10 வருடமாக ஐபிஎல் போட்டிகளில் முக்கியமான இரண்டு அணிகளாக பார்க்கப்படும் மும்பை அணியும், சென்னை அணியும் நாளை நேருக்கு நேர் களம் காண இருக்கிறது.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து, இந்தியா பாகிஸ்தான் இந்த அணிகள் நேருக்கு நேர் ஒரு ''பை- லேட்ரல்'' போட்டியில் விளையாடினால் அந்த போட்டி எந்த அளவிற்கு வைரல் ஆகும். அதே சுவாரசியம் கொண்டதுதான் மும்பை, சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியும்.

சென்னை அணி தடை செய்யப்பட்ட போது சென்னை ரசிகர்களை அதிகம் கலாய்த்தது மும்பை ரசிகர்கள்தான். ஆனால் அதே மும்பை ரசிகர்கள்தான், ஐபிஎல்லில் போட்டிக்கு நல்ல கை குறைந்துவிட்டதே என்ற வருத்தத்திலும் இருந்தார்கள்.

All set for Mumbai vs Chennai IPL match in Wankhede Stadium. It is the most expected match in this IPL series.