மலையாளத்தின் இளம் இயக்குநரும், நடிகருமான வினீத் ஶ்ரீனிவாசன் ரஜினி மற்றும் அஜித்தின் தீவிர ரசிகர். ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் ஷோ பார்த்தே ஆகும் அளவுக்கு வெறியரான இவர் அஜித்துக்கும் தீவிர ரசிகர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார் வினீத் ஶ்ரீனிவாசன். அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "அற்புதமான ரசிக தருணம் இது. என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்குத் தெரியும் இது எனக்கு எவ்வளவு முக்கியமான நிகழ்வு என்று' என பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் வினீத் ஶ்ரீனிவாசன்.
அஜித்தை 18 வருடங்களுக்கு முன் அதாவது 2000-ம் ஆண்டில் முதன்முதலாகச் சந்தித்தபோது தன்னுடன் பேசியதை இப்போதும் மறக்காமல் அஜித் நினைவுபடுத்தியது தன்னை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுசென்று விட்டது எனவும் சிலாகித்துள்ளார் வினீத் ஶ்ரீனிவாசன்.
"இவர் நம்மளை விட பெரிய ரசிகரா இருப்பார் போலயே" என அவரது புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய மலையாள நடிகரான நிவின் பாலியும் அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vineeth srinivasan meets Ajith with his family. Vineeth captioned this, "Ultimate fan boy moment".

#ajith #vineeth #jimikkikammal