மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது இந்தி நடிகர் சல்மான்கான் மானை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. <br /> <br />மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவரை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சில மணிநேரத்திற்கு பின்னர் சல்மானுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார். <br /> <br />Jodhpur court gives Bail for Salman khan on the blackbuck poaching case. Salman khan covicted for five years sentence on the blackbuck poaching case.