Surprise Me!

வீரத் தமிழச்சி பட்டம் கொடுத்த சிவகார்த்திகேயன்

2018-04-09 1,391 Dailymotion

விஜய் டி.வி-யில் தொகுப்பாளராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் டி.வி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தாய்வீடான விஜய் டி.வி-க்கு நன்றி செலுத்துவார்.
இந்நிலையில், தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இந்த வாரத்திற்கான சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மேடைக்கு வந்தபோது, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவரும் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி பாடிக்கொண்டிருந்தார்கள்.
செந்தில் - ராஜலட்சுமி ஜோடி பாடி முடித்ததும், ராஜலட்சுமியைப் பார்த்து 'வீரத் தமிழச்சி' என்று அவருக்கு ஒரு பட்டத்தைக் கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதைக்கேட்டு, நாட்டுப்புறப் பாடல் புகழ் ராஜலட்சுமி நெகிழ்ந்து போனார்.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் ஒரு பாடலை ராஜலட்சுமியின் கணவரும், பாடகருமான செந்தில் பாட, மகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன், அவரை மனதாரப் பாராட்டினார்.
ஏற்கெனவே, 'ஜல்லிக்கட்டு' போராட்டத்தின் மூலம் லைம்லைட்டுக்கு வந்த ஜூலியை வீரத் தமிழச்சி என பலரும் வாழ்த்தினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து அவரது செயல்களால் பெயரைக் கெடுத்துக்கொண்டார். இந்நிலையில், இன்னொரு வீரத் தமிழச்சியா என ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகினர்.

Sivakarthikeyan attends 'Super singer' program as a guest. Sivakarthikeyan gives 'Veera thamizhachi' title for folk singer Rajalakshmi.

#sivakarthikeyan #supersinger #vijaytv

Buy Now on CodeCanyon