Surprise Me!

மாதவன் மகனுக்கு இப்படி ஒரு திறமையா?: போட்டி போட்டு வாழ்த்தும் பிரபலங்கள்!

2018-04-09 11,965 Dailymotion

நடிகர் மாதவன், சரிதா தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். பார்க்க மாதவன் போன்றே இருக்கும் வேதாந்துக்கு நீச்சலில் அதிக ஆர்வம் உண்டு.
தாய்லாந்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வேதாந்த் பதக்கம் வென்றுள்ளார். அவர் முதல் முறையாக இந்தியாவுக்காக பதக்கம் வென்றதை மாதவன் சமூக வலைதளத்தில் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
வேதாந்த் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்தது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவர் மேலும் பல வெற்றிகள் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.
குட்டி சாம்பியன் வேதாந்துக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும், உங்களின் பெற்றோருக்கும் இது மறக்க முடியாத தருணம். இது போன்று மேலும் பல வெற்றிகளை பெறட்டும் என்று சமக தலைவர் சரத்குமார் ட்வீட்டியுள்ளார்.
தோள் பட்டை காயம் காரணமாக ரோஹித் ஷெட்டி படத்தில் மாதவன் நடிக்க முடியாமல் போனது. அவருக்கு பதில் அந்த படத்தில் வில்லனாக நடிக்கும் சோனு சூத் மாதவன்,வேதாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Congratulatory wishes are pouring in for actor Madhavan after his son Vedaant won his first medal for India in an international swim meet held in Thailand.

#madhavan #son #twitter

Buy Now on CodeCanyon