பாலிவுட்டில் ஒழுங்கு அதிகம் என்று கூறி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்று வெளியிடை, நிவின் பாலியின் ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் தவிர மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
ஷ்ரத்தா மிலன் டாக்கீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். திக்மான்ஷு துலியா இயக்கி வரும் இந்த படத்தில் ஷ்ரத்தா கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
பாலிவுட்டில் எல்லாம் ஒழுங்காகவும், ப்ரொபஷனலாகவும் உள்ளது என்று ஷ்ரத்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் கோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் ஒழுங்கு இல்லையா என்று ஆளாளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நான் பாலிவுட்டில் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் வட இந்தியாவில் வளர்ந்தவள். என் அப்பா ராணுவத்தில் பணியாற்றினார். நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள், கன்னடத்துப் பெண். ஆனால் எனக்கு இந்தி பேசத் தெரியும் என்று கூறியுள்ளார் ஷ்ரத்தா.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாலிவுட் போன மகிழ்ச்சியில் பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழ், மலையாளம், கன்னட திரையுலகை குறைத்துப் பேசிய அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

Actress Shraddha Srinath said in an interview that everthing is more disciplined and professional in Bollywood. Her words haven't gone down well with Kollywood, Mollywood and Sandalwood fans.