Surprise Me!

குட்டியானை, பைக் மோதல் 3 பேர் பலி- வீடியோ

2018-04-10 493 Dailymotion

<br />மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி ஆசிரியர்கள் மீது குட்டி யானை வாகனம்மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் பலத்த காயம் அடைந்தகுட்டியானை ஓட்டுனர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். <br />வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே நகரிகுப்பம் பகுதியில் அமைந்துள்ளது மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம். இந்த மையத்தில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும்உடற்கல்வி ஆசிரியர்களாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வாமனே நீலேஷ், மற்றும் உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாதுகர் சிங் ஆகிய இருவரும் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருவாலங்காட்டில் இரு சக்கர வாகனத்தில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த குட்டியானை வாகனம் இவர்கள் மீது நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது.இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த திருவாலங்காடு சின்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டியானைஓட்டுனர் விஜயகுமார் உடனடியாக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன் வழியிலேயே அவரும் பரிதாபமாகஉயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். <br /> <br />

Buy Now on CodeCanyon