Surprise Me!

பொது கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு புதுவையில் பதற்றம்- வீடியோ

2018-04-10 280 Dailymotion

பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நெல்லை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் <br /> <br />தலித் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது அப்போது மேடையின் பின்புறமாக வந்த வாலிபர் மேடையை நோக்கி பெட்ரோல் குண்டை வீசினார். அப்போது குறி தவறி மேடையின் முன்புறம் கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிந்தது. இதனால் மேடையில் இருந்தவர்கள் பதறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர். அப்போது மேடையின் பின்புறமிருந்து பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வேல்முருகன் என்றும் அளவுக்கதிகமாக மது அருந்தி பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வந்து பொதுக்கூட்டத்தில் வீசியது தெரியவந்துள்ளது.மேலும் மேடையில் குறிப்பிட்ட சாதி குறித்து பேசியதால் ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Buy Now on CodeCanyon