Surprise Me!

டூப்ளசிடம் மன்னிப்பு கேட்ட சினிமா பிரபலம்- வீடியோ

2018-04-11 2,506 Dailymotion

ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் போராடி வரும் நேரத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சோறா, ஸ்கோரா என்று கேட்டு போராடுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு இடையே நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது.
மைதானத்திற்குள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டி நடந்து கொண்டிருந்தபோது சிலர் தங்களின் காலணிகளை கழற்றி மைதானத்தில் வீசினார்கள்.
மைதானத்திற்குள் விழுந்த ஷூ ஒன்றை சிஎஸ்கே வீரர் டூப்ளசி எடுத்து வந்து ஓரமாக போட்டார். கையில் ஷூவை எடுத்த பிறகு அவர் பார்வையாளர்களை பார்த்து என்னய்யா இப்படி பண்றீங்களேய்யா என்பது போன்று பாவமாக ஒரு பார்வை பார்த்தார்.
விருந்தோம்பல் - தமிழனின் தலையாய பண்பாடு! இதை செய்தவன் - தமிழினத்தில் ஒரு வேறுபாடு! புரியும்படி சொல்லனும்ணா - அவன் வேற ஏதோ ஒரு ப*டு! மன்னிப்புக்கள் @faf1307 #CSKvKKR என்று ட்வீட்டியுள்ளார் ரூபன்.

Editor Reuben was angry after seeing tamils hurling shoe in the ground when CSK and KKR players were playing in the yesterday's IPL match held in Chennai.

Buy Now on CodeCanyon