சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சேப்பாக்கத்தில் 200 ரன்களை சேஸ் செய்து அசத்தல் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ஷாக் கொடுத்தது. இதையடுத்து நேற்று இரவு முதல், நெட்டிசன்கள் சிஎஸ்கே அணியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். 2 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய இரு த்ரில் போட்டிகளிலும் சிங்கமாக கர்ஜித்த சிஎஸ்கே அணியை போற்றி புகழ்ந்து வருகிறார்கள். வயதானவர்கள் அணி என்றெல்லாம் வக்கனை பேசியவர்கள் வாய் உடைக்கப்பட்டுவிட்டதாக கொக்கரிக்கிறார்கள், டோணியின் அன்பு தம்பிகள். இதோ சில கலக்கல் டுவிட்ஸ். <br /> <br /> <br />Netizens praising Chennai Super Kings for its continue performance in the IPL. <br />