Surprise Me!

இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை போட்டிகள் நடைபெறும் இடங்கள் தேர்வு

2018-04-11 3,872 Dailymotion

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று சில அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த அடுத்த 6 போட்டிகள் மாற்றப்படுகின்றன. விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், புனே மற்றும் ராஜ்கோட் மைதானங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கூறியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. <br /> <br />சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன <br /> <br />IPL management has decided to change IPL matches to be held in Chennai due to protests in Tamil Nadu.

Buy Now on CodeCanyon