Surprise Me!

மோடியை கடுமையாக திட்டிய வைகோ-வீடியோ

2018-04-12 1 Dailymotion

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சின்னமலைப் பகுதியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தி பிரதமரின் வருகைக்கு மதிமுகவினர் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். சென்னை சின்னமலை பகுதியில் மினி டெம்போவில் நின்றபடி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது வைகோ பேசியதாவது : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது நான் தான். இலங்கையில் கொத்துகொத்தாக தமிழர்களைக் கொன்ற அதிபர் ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைத்திருந்தார். <br />

Buy Now on CodeCanyon