காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ், இந்தத் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, அணியின் முக்கிய வீராரன சின்ன தல சுரேஷ் ரெய்னா, தசை பிடிப்பால், அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. <br /> <br />ஐபிஎல் சீசன் 11 துவங்கியுள்ளது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வென்றுள்ளது. முதல் நாளில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே கடைசி ஓவர்களில் பிராவோ மற்றும் கேதார் ஜாதவில் அதிரடி ஆட்டத்தில் வென்றது. <br /> <br />due to injury raina takes rest from 2 matches