Surprise Me!

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்..பாமக சார்பில் போராட்டம்-வீடியோ

2018-04-18 279 Dailymotion

கல்லூரி மாணவிகளிடம் பேசி, தவறான வழிக்கு அழைப்பு விடுத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை மட்டும் பலிகடாவாக்கி, அதிகார உச்சத்தில் இருக்கும் சில பெரிய மனிதர்களை காப்பாற்ற சதி நடப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்திற்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். <br />

Buy Now on CodeCanyon