Surprise Me!

காவேரிக்காக உதயநிதியின் சர்ச்சை சொதப்பல் ட்வீட்- வீடியோ

2018-04-19 1,360 Dailymotion

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமா படங்களை ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மார்ச் 1ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடந்த சினிமா ஸ்டிரைக் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இனி சினிமா டிக்கெட்டின் விலை ரூ.150க்கு மேல் இருக்காது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே.. என்று ட்வீட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உங்களிடம் படம் எதுவும் இல்லை என்பதால் இப்படி கொளுத்திப் போடுகிறீர்களா என்று நெட்டிசன்கள் அவரை கேட்டுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டை பார்த்தவர்கள், உங்களின் சன் மற்றும் கலைஞர் டிவிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் ஒத்தி வைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
எல்லாம் சரி, உங்களின் சன் ரைசர்ஸ் அணியை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்கச் செய்தால் இன்னும் கவனத்தை ஈர்க்கலாமே என்று நெட்டிசன்கள் ஐடியா கொடுத்துள்ளனர்.

Actor cum producer Udhayanidhi Stalin tweeted asking whether movie release will be postponed till Cauvery Management Board is set up.

#udayanidhi #stalin #cauvery

CRDITS:
Happy Life by FREDJI https://soundcloud.com/fredjimusic
https://www.facebook.com/fredjimusic/
Music promoted by Audio Library https://youtu.be/u4PI5p5bI9k

Title: Happy Life
Artist: FREDJI
Genre: Dance & Electronic
Mood: Happy
Download: https://goo.gl/jE8o6j

Buy Now on CodeCanyon