Surprise Me!

நிர்மலா தேவி குறித்து இன்று விசாரணை ஆரம்பம் - ஐ ஏ எஸ் அதிகாரி சந்தானம்-வீடியோ

2018-04-19 4,214 Dailymotion

பேராசிரியை நிர்மலா விவகாரம் குறித்து ஆளநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் மதுரையில் விசாரணையைத் தொடங்கியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது தம்மை அணுகிய அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பண உதவியும் செய்வதாகக் கூறியதாக பேராசிரியை நிர்மலா அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திட்ம் புகார் அளித்தும் ஒரு மாதத்திற்கு பிறகு அவர் மீது தற்காலிக பணியிடை நீக்கம் மட்டுமே செய்தது.<br />

Buy Now on CodeCanyon