Surprise Me!

தாழ்த்தப்பட்ட பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்...வீடியோ

2018-04-19 1 Dailymotion

மாற்றத்திற்கான முதல்படி இதுவென நெகிழ்ந்துள்ளார் 25 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பக்தர் ஒருவர். ஹைதராபாத்தின் ஸ்ரீரங்கநாத கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை கோயில் அர்ச்சகர் சுமந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அரங்கேறி வரும் நிலையில், ஹைதராபாத்தை சேர்நத் கோயில் அர்ச்சகர் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமகத்தை சேர்ந்த இளைஞரை தனது தோளில் சுமந்து கொண்டு கோயிலுக்குள் அழைத்து சென்றுள்ள சம்பவம் அனைவரையும் உற்றுநோக்கச் செய்துள்ளது. ஹைதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர்,60 வயது சிஎஸ் ரங்கராஜன். தெலுங்கானா மாநில கோயில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளராக இவர் உள்ளார். <br />

Buy Now on CodeCanyon