Surprise Me!

'மிஸ்டர் சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!- வீடியோ

2018-04-19 1,909 Dailymotion

சினிமா ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய திரைப்படங்களை நாளை முதல் ரிலீஸ் செய்யவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். படத்தின் ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், பட விழாக்கள் ஆகியவையும் நாளை முதல் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாளை கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகத்தில் வெளியாக இருக்கிறது. வாராவாரம் மூன்று படங்கள் என்கிற அளவில் வரிசையாகப் படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கௌதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் 22-ம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Gautham Karthik starred 'Mr.Chandramouli' audio will be released on April 25.

#mrchandramouli #gauthamkarthik #audiolaunch

Buy Now on CodeCanyon