Surprise Me!

கதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிக்க மாட்டேன் : ஆலியா பட்- வீடியோ

2018-04-20 547 Dailymotion

கதுவா சிறுமி குறித்த செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். <br />ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தார்கள். <br />இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியிருப்பதாவது, பாலிவுட்காரர்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கோபமாக உள்ளனர். இது வெட்கப்பட வேண்டிய விஷயம். இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டதே என்று ஒரு பெண்ணாக, மனுஷியாக வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். <br />கதுவா சிறுமியின் வழக்கு பற்றிய செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டேன். முதல் இரண்டு நாட்கள் அது குறித்த அனைத்து செய்திகளையும் படித்தேன். அதை தொடர்ந்து படித்தால் வேதனையும், கோபமும் தான் அதிகரிக்கிறது. அதனால் கதுவா செய்திகளை படிப்பதை நிறுத்திவிட்டேன்.

Buy Now on CodeCanyon