கார் டயர்வெடித்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த கார் தீப்பற்றி எரிந்ததில் காரில் சென்ற 3 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர் . <br /> <br />திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஏரிப்பாளையம் என்ற இடத்தில் சேலத்திலிருந்து மூனாறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென டயர்வெடித்த நிலையில் சாலை ஓரபள்ளத்தில் மோதி நின்றது.காரில் பயணம் செய்த சிவஞானம் என்பவரது குடும்பத்தை சார்ந்த 3 குழந்தைகள் உட்பட 9 பேருக்கு இதில் காயம் ஏற்பட்டது.சம்பவ இடத்திற்க்கு வந்த உடுமலை காவல்துறையினர்கார் விவத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து கோவை அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.இந்நிலையில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீபற்றி முழுவதுமாக எரிந்தது இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.