லங்கர் கட்டை சூதாட்டம் ஆடிய அதிமுக பிரமுகர் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிராமங்களில் நடைபெறும் மஹாபாரத நிகழ்ச்சிகளில் கலையில் சொற்பொழிவும் இரவில் தெருகூத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம் இதனிடையே இந்த மஹாபாரத நிகழ்ச்சியின் போது லங்கர் எனப்படும் சூதாட்ட நிகழ்ச்சியும் நடத்தப்படும் இந்த சூதாட்டத்தில் பாமர மக்கள் பலரும் பனங்களை இழப்பதுடன் தங்களது வாகனங்கள் நகைகள், மனைவின் தாலி உள்ளிட்டவற்றை வைத்து சூதாடுவதால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன இதனால் போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்வார்கள் இதனால் கடந்த சில காலங்களாக இந்த லங்கர் சூதாட்டம் இல்லமல் போனது.
இந்த நிலையில் இந்த லங்கர் சூதாட்டம் மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலையெடுத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பச்சிகானப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மஹாபாரத நிகழ்ச்சியின் போது லங்கர் சூதாட்டம் நடைபெற்ற வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி ஒன்றிய பேரவை துணை செயலாளர் லங்கர் கட்டை உருட்டி சூதாட்டம் விளையாடுவது தெரிய வந்துள்ளது. மக்களை சீரழிக்கும் சூதாட்டத்தை ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகரும் விளையாடி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

des : The loudspeaker's gambling is the video of the AIADMK.