Surprise Me!

அந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. - விஷால் அறிவிப்பு

2018-04-24 1 Dailymotion

மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேதியில் 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என விஷால் தற்போது மறுத்துள்ளார்.
'இரும்புத்திரை' ரிலீஸில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்க்கவேண்டியது எனது கடமை எனத் தெரிவித்துள்ளார் விஷால். படத்தை வாங்கியவர்கள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் அனுமதியின்றி ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.
விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் சினிமா ஸ்ட்ரைக்குக்கு முன்பே ரிலீஸுக்கு தயாரானது. மற்ற திரைப்படங்களின் வெளியீட்டுக்கு வழிவிடும் விதமாக ரிலீஸ் மார்ச் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
அதற்குப் பிறகு ஸ்ட்ரைக் தொடங்கியதால் எந்தப் படங்களுமே கடந்த வாரம் வரை வெளியாகவில்லை.ஸ்ட்ரைக் முடிந்ததும் 'இரும்புத்திரை' வெளியாகும் எனக் கருதப்பட்ட நிலையில், மே 11-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த அறிவிப்பையும் விஷால் மறுத்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால்' 'இரும்புத்திரை' திரைப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனக் கூறப்படுகிறது.

Vishal, Samantha and Arjun starrer 'Irumbuthirai' supposed to be released on May 11th. However, Vishal has now denied that will not be released on that date.

#vishal #irumbuthirai #samantha

Buy Now on CodeCanyon