பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் ரிலீஸுக்காக உலகம் முழுவதுமிருக்கும் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஷங்கரின் '2.ஓ' படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாததால் 'காலா' படத்தை ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்தார் தயாரிப்பாளர் தனுஷ்.
தமிழகத்தில் சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்றதால் குறித்த தேதியில் காலா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடர்ந்து வாராவாரம் திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு மூலம் ரிலீஸாகும் படங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார். சென்சார் சான்றிதழ் வாங்கிய வரிசைப்படி படத்தின் ரிலீஸ் தேதி நிச்சயம் தள்ளிப்போகும் எனக் கருதப்பட்டாலும், கர்நாடக தேர்தலையும், ரஜினிக்கு நிலவு எதிர்ப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால் கர்நாடகத்தில் 'காலா' படத்தை வெளியிடவிட மாட்டோம் என சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரிலீஸில் சிக்கல் ஏற்படும் எனக் கருதி ரிலீஸை ஒரேயடியாக தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்.
கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12 அன்று நடைபெறுவதை அடுத்து, தேர்தல் களேபரங்கள் முடிந்தபிறகு சாவகாசமான ரிலீஸ் செய்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என ரஜினி தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். அதனாலேயே, 'காலா' படத்தை ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

Rajini fans are waiting for the release of 'Kaala' movie. Producer Dhanush announced that kaala will be released on June 7th. This decision has been taken for Karnataka elections.

#kaala #releasedate #rajinikanth