ஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தார் என்பதை நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை என்று அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் அதை அவர்கள் கண்டுகொள்வது இல்லை.
இந்நிலையில் மனைவி ஐஸ்வர்யா பற்றி அபிஷேக் பச்சன் கூறியதாவது,
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்பதால் அவரை திருமணம் செய்யவில்லை. அழகை அடிப்படையாக கொண்டது அல்ல எங்களின் உறவு. அவர் ஒரு பிரபலமான நடிகை என்பதாலும் திருமணம் செய்யவில்லை.
மேக்கப் இல்லாத ஐஸ்வர்யா ராயை பிடிக்கும். ஐஸ்வர்யாவின் நல்ல குணத்திற்காக அவரை திருமணம் செய்தேன். என் மனைவியை பார்த்து மக்கள் விசில் அடிப்பது எனக்கு பழகிவிட்டது. நான் அவரை கவர ஒருநாளும் விசில் அடித்தது இல்லை.
திருமணம் முடிந்த புதிதில் புதுப்பெண் கணவருக்கு ஏதாவது சமைத்துக் கொடுக்க வேண்டும். ஐஸ்வர்யா எனக்கு அல்வா செய்து கொடுத்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அல்வா அருமையாக இருந்தது என்றார் அபிஷேக் பச்சன்.
திருமணமாகிவிட்டதால் நான் தனிக்குடித்தனம் செல்ல மாட்டேன். என் பெற்றோரின் பங்களாவான ஜல்சாவில் இருப்பது தான் எனக்கு நிம்மதி என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

Bollywood actor Abhishek Bachchan said that he married Aishwarya Rai not for her beauty or popularity but for the good human being she is.

#aishwaryarai #abhishekbachchan #bollywood